Homeசெய்திகள்தமிழ்நாடுகாவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை

-

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை

வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை

நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தமிழக டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கை இந்த விவகாரத்தில் பொருந்தும் எனவும் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.

நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தார்.

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை

இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அதுவும் போக்குவரத்து துறை சார்பில் கிளைம் செய்து கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின் பொழுது பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் 2021 ஆம் ஆண்டு தமிழக டிஜிபி வெளியிட்ட உத்தரவு இந்த சம்பவத்துக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

MUST READ