Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசியல் ஆசான் திருமாவளவன்: உதயநிதி ஸ்டாலினின் துணிச்சலான பேச்சுக்கு வன்னி அரசு நெகிழ்ச்சி!

அரசியல் ஆசான் திருமாவளவன்: உதயநிதி ஸ்டாலினின் துணிச்சலான பேச்சுக்கு வன்னி அரசு நெகிழ்ச்சி!

-

- Advertisement -

பொறாமை பிடித்துள்ள சனாதனக் கும்பலுக்குக் கடுமையான கண்டனம் 
சட்டப்பேரவையில் விவாதத்தின் போது, விசிக தலைவர் தொல். திருமாவளவனைத் தனது அரசியல் ஆசான் எனக் வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திய திமுக எதிா்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கருத்து, திராவிட மற்றும் சமூக நீதி இயக்கங்களின் கொள்கை வலிமையைக் காட்டுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைச்கா் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.அரசியல் ஆசான் திருமாவளவன்: உதயநிதி ஸ்டாலினின் துணிச்சலான பேச்சுக்கு வன்னி அரசு நெகிழ்ச்சி!

பேரவையில் சுவாரஸ்யம்:
கடந்த 28.8.2026 அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய விசிக அமைச்சா் வன்னி அரசு, திண்டிவனம் தொகுதியில் விசிகவின் வெற்றிக்குப் பாடுபட்ட திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது ஜாலியாக, “நாங்கள் மட்டுமே நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறோம்; திமுக தரப்பில் இருந்து நன்றி சொல்லவே இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

we-r-hiring

“தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கைக் கூட்டணி!”
வன்னி அரசின் இந்த பேச்சிற்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “எங்களது தலைவருக்கும் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கும் இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; அது ஆழமான கொள்கைக் கூட்டணி. என்னுடைய அரசியல் ஆசான் அண்ணன் திருமாவளவன் என்று முன்பும் சொல்லியிருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன் என மனம்திறந்து பேசினார்.

சனாதனக் கும்பலுக்குக் கண்டனம்:
உதயநிதி ஸ்டாலினின் இந்த உரையைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள வன்னி அரசு, பெரியாரை ஆசானாக ஏற்றுக்கொண்ட உதயநிதி, திருமாவளவனை எப்படி ஆசான் என்று சொல்லலாம் எனக் கூறி சிலர் நஞ்சைக் கக்கி வருகிறார்கள். பெரியாருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சனாதனக் கும்பலோடு கொஞ்சி குலவியவர்களுக்குத் திடீரென பெரியார் மீது போலி கரிசனம் வந்துவிட்டது வியப்பாக உள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருக்குறளைச் சுட்டிக்காட்டி சாடல்:
புரட்சியாளர் அம்பேத்கரைத் தனது தலைவர் என்று போற்றியவர் தந்தை பெரியார். அவரைப்போலவே இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின்களும் எழுச்சித்தமிழரைத் தனது அரசியல் ஆசான் என வெளிப்படையாகப் பேசும் பக்குவத்தையும் துணிச்சலையும் பெற்றுள்ளார் என்றும், இதைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாமல் சிலர் புலம்புவதாகவும் அவர் சாடினார். மேலும், பொறாமை கொண்டவர்களின் நிலையை விளக்குவதற்கு,

“அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் 
வழுக்கியும் கேடீன் பது”

என்ற குறளை மேற்கோள் காட்டி, பொறாமை குணம் கொண்டவர்களுக்கு வேறொரு பகைவர் தேவையில்லை, அந்தப் பொறாமையே அவர்களை அழித்துவிடும் என்றும் வன்னி அரசு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் வேட்பாளர் சர்ச்சை நிலவும் சூழலில் பரபரப்பு!முதலமைச்சர் விஜயுடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு

MUST READ