Homeசெய்திகள்தமிழ்நாடுஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு: தவெக அரசைக் கண்டித்து செப்டம்பர் 3-ல் அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மதுரையில்...

ஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு: தவெக அரசைக் கண்டித்து செப்டம்பர் 3-ல் அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் அறிவிப்பு

-

- Advertisement -

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை இழிவுபடுத்திப் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினரையும், அதற்கு நடவடிக்கை எடுக்காத தவெக அரசையும் கண்டித்து, வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு: தவெக அரசைக் கண்டித்து செப்டம்பர் 3-ல் அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் அறிவிப்பு

ஜல்லிக்கட்டை கொச்சைப்படுத்திய தவெக எம்.எல்.ஏ:  தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும், பாரம்பரிய வீரவிளையாட்டாகவும் விளங்கும் ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர்களைச் சீரழிக்கிறது என்று தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவதூறாகவும் அநாகரீகமாகவும் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார்.

we-r-hiring

இதற்குக் கலாச்சார ஆர்வலர்களும், கிராமப்புற மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.செப்டம்பர் 3-ல் மாபெரும் கண்டனப் போராட்டம்:  ஜல்லிக்கட்டுப் போட்டியை அவமதிக்கும் வகையில் பேசிய தவெக எம்.எல்.ஏ மற்றும் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் தவெக அரசைக் கண்டித்து, அதிமுக மதுரை மாவட்டக் கழகங்களின் சார்பில் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்:  இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தமிழர்களின் அடையாளத்தையும் வீரத்தையும் அசிங்கப்படுத்தும் வகையில் பேசுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது.

தமிழ் மண்ணின் பண்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் தவெக அரசிற்கும், அந்த எம்.எல்.ஏ-விற்கும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் முன்னணி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்டக் நிர்வாகிகள் மற்றும் பாயும் காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வேட்பாளர் சர்ச்சை நிலவும் சூழலில் பரபரப்பு!முதலமைச்சர் விஜயுடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு

MUST READ