spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தீர்ப்பாயம் கேள்வி!

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தீர்ப்பாயம் கேள்வி!

-

- Advertisement -

 

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தீர்ப்பாயம் கேள்வி!
File Image

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, சென்னையில் பெய்த கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அந்த நீருடன், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் கழிவுகளும் கலந்துள்ளதால், துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

we-r-hiring

முன்னாள் முதலமைச்சர் கே.சி.ஆருக்கு இடுப்பு எலும்பு முறிவு!

இது சம்மந்தமான வழக்கு சென்னையில் உள்ள தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் CPCB தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்தனர்.

எண்ணூரில் மழைநீரில் கலந்த எண்ணெய் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

CPCL தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களில் கசிவு இல்லை; தரைப்பகுதியில் இருந்த எண்ணெய் மழைநீரில் கலந்துள்ளது. மழைநீரில் எண்ணெய் கலப்பதைத் தடுக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. மழை வெள்ள நீரில் தேங்கியிருந்த எண்ணெய் கழிவுகளை சேகரிக்கவும் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது” என்று வாதிட்டார்.

யுபிஐ-ல் தினமும் ரூ. 5 லட்சம் வரை பணம் அனுப்பலாம் – ஆர்பிஐ அறிவிப்பு..

இதற்கு நீதிபதி, “தரைப் பகுதியில் உள்ள எண்ணெய் மழைநீரில் கலக்கும் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியாதா? மாவட்ட ஆட்சியரும், வருவாய் நிர்வாகமும் என்ன செய்கின்றன? உண்மை நிலையை அறிய தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நிபுணர் குழுவை அமைக்கவில்லை? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

எண்ணெய் கழிவை வேண்டுமென்றே மழை வெள்ள நீரில் கலந்துவிட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மழை வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக, விரிவாக ஆய்வுச் செய்து அறிக்கை சமர்பிப்போம். கழிமுகமும், கிராமங்களும் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ