spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை கண்டித்து சுவரொட்டிகள்!

மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை கண்டித்து சுவரொட்டிகள்!

-

- Advertisement -

பெண்களின் படிப்பை நிறுத்த பார்க்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலையை கண்டித்து மாணவர் மன்றம் சார்பில் பரமக்குடி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை கண்டித்து சுவரொட்டிகள்!சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்ப்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கல்லூரி மாணவிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

இந்த நிலையில்மாதம் ஆயிரம் கொடுத்து அரசாங்கம் எங்களை படிக்க அனுப்புது, பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி பயமூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பாக்குது “Save Girls Education ” என்ற வாசகங்களுடன் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொம்பு முளைத்த போன்ற புகைப்படமும், அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்ளும் புகைப்படமும் இடம்பெற்ற சுவரொட்டிகள் பரமக்குடி நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் மாணவியர் பிரிவு சார்பில் பரமக்குடி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ