Homeசெய்திகள்தமிழ்நாடுவிருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு நடைபெற்றுள்ளது - பிரேமலதா விஜயகாந்த் தாக்கு!

விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு நடைபெற்றுள்ளது – பிரேமலதா விஜயகாந்த் தாக்கு!

-

- Advertisement -

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது!

விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு நடைபெற்றுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சி அடையவில்லை; வீழ்த்தப்பட்டுள்ளார். தோல்வியை முழு மனதாக மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் இது தெரியும். .விருதுநகரில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். திட்டமிடப்பட்டு சூழ்ச்சியால் அவர் வீழ்த்தப்பட்டார் . அதற்கான ஆதாரங்கள் உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்

நாற்பதும் நமதே நாடும் நமதே என்று முதலமைச்சர் கூறியதை உண்மையாக வேண்டும் என்பதற்காக வாக்கு எண்ணிக்கையில் அமைச்சர்கள் முறைகேடு செய்துள்ளனர். விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு நடைபெற்றுள்ளது. மதிய உணவு இடைவேளை முடிந்து இரண்டு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. தனக்கு அழுத்தம் வருவதால் செல்போனை அனைத்து வைப்பதாக விருதுநகர் ஆட்சியர் கூறியுள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இமெயில் மூலம் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம். என இவ்வாறு அவர் பேசினார்.

MUST READ