டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவுகளில் 645 காலிப் பணியிடங்களை நிரப்புதற்கான முதனிலை தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நிலைத் தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை எழுத 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், மூன்றாம் பாலினித்தவர்கள் 25 பேரும் என 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் தகுதிப் பெற்றுள்ளனர். தேர்வினை கண்காணிக்கும் பணியில் 1905 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் தேர்வினை எழுத உள்ளனர். குரூப் 2 பதவிகளில் 50 இடங்களும், குரூப் 2ஏ பதவிகளில் 595 இடங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
குரூப் 2 தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே. பிரபாகர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 645 காலி பணியிடங்கள் உள்ளது. வினாத்தாள் பொதுவாக பல கட்டமாக தயாரிக்கப்படுகிறது, மேலும் பல கட்ட பரிசீலனை செய்யப்படுகிறது. மொழிபெயர்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. இது போன்ற தவறுகளை சரி செய்யும் நடவடிக்கையில் முயற்சித்து வருகிறோம். இதில் மாணவர்களுக்கு பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து பணியிடங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறோம். தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குரூப் 2 இல் நிச்சயமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும். போட்டித் தேர்வு நிறைய பேர் எழுதுவது ஆரோக்கியமான சூழ்நிலை. இதனால் அவர்களுக்கு knowloge improve ஆகும்.