Homeசெய்திகள்தமிழ்நாடுவரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி... இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி… இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

-

வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பான பணிகளை ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 28ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிகை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பான பணிகளை ஆகஸ்ட் 20ம் தேதி முதல் அக்டோபர் 28ம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் என மாநில தலைமை தேர்தல்அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலை அக்டோபர் 29ஆம் தேதி வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

"ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு"- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்!

இதன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்றும், 2025 ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இப்பணிகளை முடித்து இறுதி வாக்காளர் பட்டியலை 2025ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ