spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமழை பாதிப்பு- அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

மழை பாதிப்பு- அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

-

- Advertisement -

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை தொடரும் நிலையில், கிண்டி, கோயம்பேடு, அசோக் நகர், வேளச்சேரி, ஓஎம்ஆர், சோழிங்கநல்லூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தங்கியுள்ள நிலையில், அதனை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மெட்ரோ பணிகள், சாலைப் பணிகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், தேங்கியுள்ள மழைநீர் காரணமாக வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

we-r-hiring

கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!

வழக்கத்தை விடவும், 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜூன் மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கும் ஒரே நாளில் மழை கொட்டித் தீர்த்துள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சென்னையிலேயே தங்கி மழை பாதிப்பு தொடர்பான பணிகளைக் கண்காணிக்க அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருவாரூரில் நடைபெறும் கட்சி விழாவிற்கு வர வேண்டாம் எனவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

கலைஞர் கோட்டம் திறப்பையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் உள்ள நிலையில் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ