
பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலகமான ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் பிரியா, “சென்னை மாநகராட்சி மண்டலம் 1, 2, 3 மழைநீர் வடிகால் பணிகள் முடிவுக்கு வரவுள்ளது. சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மழைநீர் வடிகால் பணிகள் ஜனவரி மாதம் நிறைவுப் பெறும்.

காந்தியடிகளே சிறையில் வந்துப் பார்க்க விரும்பிய போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள்!
சுமார் 55 கி.மீ. தூரத்திற்கு மழைநீர் வடிகால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை பாதிப்புக் குறித்த புகார்களை 044- 25619204, 044- 25619207 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அஞ்சலையம்மாள் சிலையை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வடகிழக்குப் பருவமழையை எதிர்க்கொள்ள சென்னை மாநகராட்சித் தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.