
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.02) காலை 10.00 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் திருவுருவச் சிலையைக் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

“நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகிறதா?”- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!
இந்த நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாநில திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன் இ.ஆ.ப. மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க. நிர்வாகிகள் 13 பேர் கைது!
கடலூரிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், கடலூர் மாவட்ட ஆட்சியர் தருண் தம்புராஜ் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.