
தொடர் மழையால், சென்னையில் சில இடங்களில் தேங்கிய மழைநீர் வடிந்து வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாகத் தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது.
அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நிறைவு!
விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை தொடர்பான புகார்களுக்குச் சென்னை மக்கள் 1913, 044-25619204, 044- 25619206, 044- 25619207 ஆகிய எண்களிலும், 94454- 77205 எண் மூலம் வாட்ஸ் அப் வழியாகவும் உதவிகளைப் பெறலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.