
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவடைந்தது.

கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை பொன்முடி, கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது, அனுமதிக்கப்பட்டதை விட, அதிகமாக செம்மண் அள்ளியது மூலம் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.
இதை அடிப்படையாகக் கொண்டு, அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், மக்களவை உறுப்பினருமான கௌதம சிகாமணி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு, ஆவணங்களையும், வெளிநாட்டுப் பணங்களையும் கைப்பற்றியுள்ளது. முறைகேடு செய்து கிடைத்த பணம் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடத்திருப்பதாகவும் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் பொன்முடியிடம் மீண்டும் விசாரிக்க முடிவுச் செய்த அமலாக்கத்துறையினர், சென்னையில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில், இன்று (நவ.30) காலை 11.00 மணிக்கு ஆஜரான அமைச்சர் பொன்முடியிடம் சுமார் 5 மணி நேரமாக விசாரணை நடத்தினர். விசாரணையானது, மாலை 04.00 மணிக்கு நிறைவடைந்தது.


