Homeசெய்திகள்தமிழ்நாடுமாமன்னன் ராஜராஜசோழனின் 1038ஆவது சதய விழா கொண்டாட்டம்!

மாமன்னன் ராஜராஜசோழனின் 1038ஆவது சதய விழா கொண்டாட்டம்!

-

 

மாமன்னன் ராஜராஜசோழனின் 1038ஆவது சதய விழா கொண்டாட்டம்!
File Photo

தஞ்சையில் ராஜராஜசோழனின் சதயவிழாவையொட்டி, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைவு!

மாமன்னன் ராஜராஜசோழனின் 1038- ஆம் ஆண்டு சதயவிழா, தமிழ் முறைப்படி அரசு சார்பில் நடத்தப்பட்டது. தஞ்சை பெரியகோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்த ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளில் ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில், சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

1038-வது ஆண்டு விழாவையொட்டி, தஞ்சை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தேவாரத் திருமுறைப் பாடல் உடன் விழா தொடங்க, ராஜராஜாசோழனுக்கு இசை புகழாஞ்சலியும் செலுத்தப்பட்டது.

‘மாணவிக்கு நேர்ந்த துயரம்’- தேசிய மகளிர் ஆணையத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!

இன்று (அக்.25) அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். பின்னர், யானை மீது திருமுறை வீதி உலா நடைபெற்றது. அதில், ஓதுவார்கள், தமிழில் திருமுறைகள் பாட,நான்கு ராஜவீதிகளிலும் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

அதன்பின், பெருவுடையாருக்கு 48 திவ்ய அபிஷேகங்களும் நடைபெற்றன. பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய மூன்று பேருக்கு ராஜராஜசோழன் விருதும் வழங்கப்படவுள்ளது.

MUST READ