
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது குறித்து புகார் அளித்தும் பல்கலைக்கழக நிர்வாகம், நடவடிக்கை எடுக்காததால் துணைவேந்தர் சுரேஷ், ஒழுங்கு அமைப்புத் தலைவர் சாம்சன் ஆகியோர் பதவி விலகக் கோரி கடந்த அக்டோபர் 18- ஆம் தேதி அன்று இரவு மாணவர்கள் 200- க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘ஒடிஷா மக்களின் மனம் கவர்ந்த வி.கே.பாண்டியன்’-விரிவான தகவல்!
இது தொடர்பாக, ஒழுங்கு அமைப்புத் தலைவர் சாம்சன் அளித்த புகாரின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 11 பேர் மீது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வகுப்புவாதத்தைத் தூண்டும் வகையில் போராடியதாக, செகந்திராபாத் காவல்துறை வழக்குப்பதிவுச் செய்துள்ளது.
“சந்திரபாபு நாயுடுவின் மனைவி நடத்தும் பேருந்து யாத்திரை குறித்து அமைச்சர் ரோஜா விமர்சனம்”!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாணவர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இந்த போராட்டத்தை நடத்தியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவி வன்கொடுமை விவகாரத்தில், தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வலியுறுத்தியும் தேசிய மகளிர் ஆணையத்திற்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.