
ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேய பாண்டியன், விருப்ப ஓய்வுப் பெற்ற உடனேயே, கேபினட் அமைச்சர் அந்தஸ்துக் கொண்ட பதவிக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார்.

ஆயுத பூஜை சிறப்பு- கடவுளுக்கு தீபம் காட்டும் இயந்திரம்
இது சாதாரண நிகழ்வு அல்ல; இதன் பின்னணி என்ன? தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார்? ஒடிஷாவின் அவரது செல்வாக்குக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
வி.கார்த்திகேய பாண்டியன், சுருக்கமாக வி.கே.பாண்டியன் என்று அழைக்கப்படுகிறார். 2000- ஆம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், செல்லும் இடமெல்லாம் மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்துகிறார். முதலமைச்சர் நவீன் பட்நாயக் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியதில், இவரது பங்கு முக்கியமானது. பல நகரங்களை கலாச்சாரச் சுற்றுலா தலங்களாக மாற்றியிருக்கிறார்.
சர்வதேச போட்டிகளை நடத்தக் கூடிய விளையாட்டு மையமாக, பல நகரங்களை உருமாற்றியிருக்கிறார். குழந்தைகள் மீதான இவரது அன்பு வி.கே.பாண்டியனை குட்டி நேரு மாமாவாகக் கொண்டாட வைத்திருக்கிறது. கோபால்பூரில் உள்ள சர்தா சஞ்சீவனி, இவரது அன்புக்கு ஓர் உதாரணம். சர்தா சஞ்சீவனி, கடந்த 2007- ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை – பட்டாசு கடைகளுக்கு கடும் கட்டுப்பாடு!
சர்தா சஞ்சீவனி என்பது எச்.ஐ.வி. பாதித்ததால், ஆதரவற்று விடப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு இல்லம். தனது பயணங்களின் போது. ஆதரவற்ற குழந்தைகளின் இல்லங்களுக்கு செல்வது குழந்தைகளுக்காக நேரம் செலவிடுவது போன்ற செயல்களால் பல மாணாக்கர்கள், இளைஞர்களுக்கு இவர் கனவு நாயகனாக இருக்கிறார்.
ஒடிஷாவில் வி.கே.பாண்டியனின் பயணம் கடந்த 2000- ஆம் ஆண்டில் தொடங்கியது. 2002- ஆம் ஆண்டு தர்மாகர் சார் ஆட்சியராக இருந்த வி.கே.பாண்டியன், அரசின் வருவாய் ஆதாரங்களை மேம்படுத்தினார். கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கான லாபத்தை அதிகப்படுத்தினார்.
ஒடிஷா மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்பன்ஜ் ஆட்சியராக இவர் பொறுப்பேற்ற போது, நாட்டிலேயே இளம் வயது ஆட்சியர் என்ற பெயரை பெற்றார். பின் தங்கிய கிராமங்களுக்கு தினசரி செல்வதன் மூலம் அங்கு மேம்பாட்டு பணிகள் வருவதற்கு காரணமாக இருந்துள்ளார். இவர் ஆட்சியராக இருந்த போது, மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டத்திற்கான தேசிய விருதை மயூர்பன்ஜ் பெற்றது.
இயல்பு நிலைக்கு திரும்பிய ஆவடி ரயில் நிலையம்
வங்கிக் கணக்கு மூலம் 100 நாள் வேலைத் திட்டத்தின் ஊதியத்தைப் பெற வைத்த இவரது திட்டம் பின்னர் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுஆயிரக்கணக்கான பணியாளர்களின் ஊதியமாக 100 கோடி ரூபாய் வங்கியில் பணப்பரிவர்த்தனையானது. ஒடிஷா மாநில அரசின் உயரிய விருதான ஹெலன் கெல்லர் விருதைப் பெற்றுள்ளார்.
இவரது எளிமையும், மக்களுடன் மக்களாக களத்தில் நிற்பதனாலும் வி.கே.பாண்டியன், ஒடிஷா மக்களின் ஒட்டுமொத்த அன்புக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.