Homeசெய்திகள்தமிழ்நாடு"யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுவது எனது பழக்கம்"- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

“யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுவது எனது பழக்கம்”- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

-

 

"யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுவது எனது பழக்கம்"- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
File Photo

வயதில் இளையோராக இருந்தாலும் யோகிகள், சந்நியாசிகளின் காலில் விழுவது தனது பழக்கம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நான்கு ஆண்டுகளுக்கு பின் இமயமலை சென்றது ரொம்ப சந்தோஷமாக இருந்தது, பயணம் நன்றாக அமைந்தது. ‘ஜெயிலர்’ படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றிய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் என்றே சொல்லத் தெரியாத ஈபிஎஸ்க்கு புரட்சி தமிழர் பட்டமா?- வைத்திலிங்கம்

இமயமலைப் பயணத்தின் போது அரசியல் தலைவர்களைச் சந்தித்தது நட்பு ரீதியானது. யோகிகளும், சந்நியாசிகளும் வயதில் இளையோராக இருந்தாலும் காலில் விழுவது எனது பழக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ