Homeசெய்திகள்அரசியல்மத்திய அரசை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

-

நீதிமன்றங்களில் சட்டத்தின் பெயர்களை ஹிந்தி சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாவை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு பாராளுமன்றத்தில் அனைத்து சட்டத்தின் பெயர்களையும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்திருந்தது. இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. மாநில மொழிகள் அல்லாமல் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை நாடு முழுவதும் திணிக்கும் பணியை மத்திய அரசு கையில் எடுத்திருப்பதாக பல்வேறு மாநில வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் கொண்டு வரும் சட்ட மசோதாவை தாக்கல் செய்ததற்கும், தொடர்ந்து ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்பில் ஈடுபட்டு வரும் செயல்களுக்கு ஏதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய அரசைக் கண்டித்து மேற்கண்ட சட்ட மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு பொருளாளர் முரளி பாபு, அம்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் லட்சுமணன் ராஜரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

MUST READ