spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தமிழ் என்றே சொல்லத் தெரியாத ஈபிஎஸ்க்கு புரட்சி தமிழர் பட்டமா?- வைத்திலிங்கம்

தமிழ் என்றே சொல்லத் தெரியாத ஈபிஎஸ்க்கு புரட்சி தமிழர் பட்டமா?- வைத்திலிங்கம்

-

- Advertisement -

தமிழ் என்றே சொல்லத் தெரியாத ஈபிஎஸ்க்கு புரட்சி தமிழர் பட்டமா?- வைத்திலிங்கம்

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ் என்றே சொல்லத் தெரியாது என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

vaithilingam

சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ஹாலில் ஓ.பி.எஸ் -அணியின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அவரின் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஐயப்பன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

we-r-hiring

வைத்திலிங்கம்

கூட்டத்தில் உரையாற்றிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், “இந்த ஆலோசனை கூட்டமானது வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி வெற்றி பெற போகிறோம் என்று ஆலோசனை செய்வதற்காக தான் இந்த கூட்டம் நடத்த முடிவு செய்தோம். மதுரை மாநாட்டில் 6,00,000 லட்சம் தொண்டர்கள் பங்கேற்று உள்ளதாக எடப்பாடி கூறினார். ஆனால் மதுரை மாநாட்டில் 70,000 தொண்டர்கள் மட்டுமே பங்கேற்று உள்ளதாக காவல் துறை தகவல் தெரிவிக்கிறது.

தமிழ் என்று கூட சரியாக சொல்லத் தெரியாதவருக்கு புரட்சி தமிழர் என்று பட்டம் கொடுப்பது தேவையில்லாத ஒன்று. எடப்பாடி வாயில் இருந்து தமிழ் என்ற உச்சரிப்பு சரியாக வந்துவிட்டால் நான் என் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். கடந்த 2021 தேர்தலில் திமுகவினர் எடப்பாடியில் சரியான வேட்பாளரை நிறுத்தி இருந்தால் எடப்பாடியில் கூட அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்” என்றார்.

MUST READ