Homeசெய்திகள்தமிழ்நாடுராமஜென்ம பூமி, CAA நிறைவேற்றப்பட்டது; UCC மற்றும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' விரைவில் வரும்...

ராமஜென்ம பூமி, CAA நிறைவேற்றப்பட்டது; UCC மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விரைவில் வரும் — பிரதமர் மோடி பேச்சு

-

- Advertisement -

பாஜகவின் 47 வது ஆண்டு தினத்தில் பாஜகவின் சாதனைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளாா்.ராமஜென்ம பூமி, CAA நிறைவேற்றப்பட்டது; UCC மற்றும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' விரைவில் வரும் — பிரதமர் மோடி பேச்சு

பாஜகவின் 47 ஆண்டுகள் நிகழ்ச்சியில், ​பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் ராம ஜென்ம பூமி கோயில் கட்டுமானம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும், அதே வேளையில் பொது சிவில் சட்டம் (UCC) மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஆகிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

we-r-hiring

மேலும், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை கட்சியின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக அவர் குறிப்பிட்டார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) புனிதமான ஆலமரத்தின் கீழ், தூய்மையான எண்ணங்களுடனும் நேர்மையுடனும் அரசியலில் ஈடுபடுவதற்கான உத்வேகத்தைப் பெற்றோம். கொள்கைகளில் எந்தச் சூழலிலும் சமரசம் செய்து கொள்ளாத, சேவை மனப்பான்மை கொண்ட ஒரு பெரிய தொண்டர் படையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்று பிரதமர் கூறினார்.

​நடைபெற்று வரும் பணிகள்:
பொது சிவில் சட்டம் மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து நாட்டில் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள பாஜக நேர்மையுடன் முயற்சிக்கிறது என்பதை நாடு அறியும். முன்னதாக நேர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளன, எதிர்காலத்திலும் கிடைக்கும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

​பிரிட்டிஷ் காலத்து நூற்றுக்கணக்கான கறுப்புச் சட்டங்களை ஒழித்தது, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டியது, பொதுப் பிரிவினரில் ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது போன்றவற்றை பிரதமர் பட்டியலிட்டார்.

​1984-ல் அதிக இடங்களை வென்ற பிறகு காங்கிரஸ் மக்களைக் கைவிட்டு விட்டதாகக் கூறிய மோடி, காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்கு (காந்தி குடும்பம்) மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாகவும், பாஜக அனைவரையும் சமமாக மதிப்பதாகவும் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தார்.

​மேலும் பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் நிறுவன தினம் இது என்பதால், கட்சியின் தலைவர் நிதின் நவீன் அவர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார். ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் கட்சி புதிய ஆற்றலுடன் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

திமுக 70% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

MUST READ