Homeசெய்திகள்தமிழ்நாடுஅன்னை தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு - ராமதாஸ் கேள்வி?

அன்னை தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு – ராமதாஸ் கேள்வி?

-

இருசக்கர ஊர்தி பயணத்திற்கு அனுமதி: பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – டாக்டர் இராமதாஸ் கேள்வி?

செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில்
அன்னைத் தமிழ் அரியணை ஏற்றுமா தமிழக அரசு என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மிரட்டும் புயல்-சென்னை வாழ் மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை தேவை

இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாக தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்றுமொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு என கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ