
குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களது வசதியின்படி ரேஷன் கடைக்கு வருகை தந்து கைரேகைப் பதிவுச் செய்யலாம் தமிழ்நாடு அரசின் உணவுத்துறை தெரிவித்துள்ளது.
பிரமயுகம் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியீடு
இது தொடர்பாக, அனைத்து மாவட்ட உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதில், குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களது வசதியின் படி ரேஷன் கடைக்கு வருகை தந்து கைரேகை பதிவுச் செய்யலாம். கட்டாயப்படுத்தி நியாய விலைக்கடைக்கு வரவழைத்து சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது.
ரேஷன் அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதியவில்லை என்றால் பெயர் நீக்கம் செய்யப்படும் என்பது தவறானது. குடும்ப அட்டைத்தாரர்கள் கைவிரல் ரேகை வைக்கும் போது, ஆவணங்கள் எதுவும் கோரக் கூடாது.
கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…
விரல் ரேகை சரிபார்ப்புப் பணியைப் பயனாளிகளுக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும். விற்பனை முடிந்த பிறகு குடும்ப அட்டைத்தாரர்களின் வீடுகளுக்கு சென்று பணியாளர்கள் கைரேகைப் பதிவு பெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.