spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய தளத்தில் கால் பதிக்கும் ரிலையன்ஸ்…மக்களை ஈா்க்கும் புதிய சலுகைகள்…

புதிய தளத்தில் கால் பதிக்கும் ரிலையன்ஸ்…மக்களை ஈா்க்கும் புதிய சலுகைகள்…

-

- Advertisement -

ஜியோ பிளாக்ராக் நிறுவனம், வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க நிதி சந்தையில் அலாவுதீன் என்ற பெயரில் முதலீட்டு தளத்தை உருவாக்கியுள்ளது.புதிய தளத்தில் கால் பதிக்கும் ரிலையன்ஸ்…மக்களை ஈா்க்கும் புதிய சலுகைகள்…ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிதி சந்தையில் புதிதாக அலாவுதீன் என்ற முதலீட்டு மேலாண்மை தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு துறையில் கால் பதிக்கிறது என்றால் அந்த துறையில் கோலோற்றி கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதில் எப்போதும் வல்லமை மிகுந்தது ரிலையன்ஸ். அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் ( பரஸ்பர நிதி) துறையில் புதியதாக களமிறங்கியுள்ளது. ஜியோ பிளாக்ராக், இப்போது அதற்கான தளத்தின் பெயரை அலாவுதீன் என வைத்திருக்கிறது.

பிரபலமான கதையில் வரும் அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை போலவே கேட்பதையெல்லாம் கொடுக்கும் இந்த அற்புத விளக்கு. அதேபோன்று தங்கள்  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் சிறப்பான லாபம் பெறலாம் என்ற நம்பிக்கை வார்த்தையை சொல்லி இருக்கிறது இந்நிறுவனம். ஜியோ பைனான்சியல் சர்விஸ் லிமிடெட் மற்றும் அமெரிக்காவை தளமாக கொண்ட பிளாக்ராக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சமபங்கில் தொடங்கியது தான் Jio blackrock asset management private limited நிறுவனம்.

we-r-hiring

சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SBI-யிடம் கடந்த மே 26-ம் தேதி அனுமதி பெற்ற ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் நிறுவனம் தற்போது தனித்துவமான முதலீட்டு மேலாண்மை தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவெறும் டிரைலர் தான் என்றும், முதலீட்டை எளிதாக அணுக கூடியதாகவும் மலிவு விலையில் மாற்ற நாங்கள் இருக்கிறோம் என ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் கூறியுள்ளது. அந்த வகையில் ஏராளமான மியூச்சுவல் திட்டங்கள் நிதி சந்தையில் கொட்டி கிடக்கும் நிலையில் ஜியோ பிளாக்ராக் என்ன செய்ய போகிறது என்பது முதலீட்டாளர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் ஒப்பந்த லாரி மோதி தாய், மகள் பலி!

MUST READ