spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவிலுக்கு மின் இணைப்பு-பொறியாளர் பணியிடை நீக்கம்;

கோவிலுக்கு மின் இணைப்பு-பொறியாளர் பணியிடை நீக்கம்;

-

- Advertisement -

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில்  கோவிலுக்கு மின் இணைப்புக்கேட்ட கிராம மக்களை-தகாத வார்த்தையில் பேசிய இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

திருச்சி மாவட்டம் கல்லக்குடி பகுதியை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு மின்  இணைப்புக் கொடுக்குமாறு மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளரிடம்  கேட்டுள்ளனர்.அதற்கு அவர் தேவையில்லாத வார்த்தைகளை பேசியுள்ளார் ஆதலால் இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம்.

we-r-hiring

கல்லக்குடி மின்வாரிய அலுவலகத்தில்  இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீதர்.இந்நிலையில் கல்லக்குடி சமத்துவபுரம் பகுதி மக்கள் அப்பகுதி முத்து மாரியம்மன் கோவிலுக்கு மின் இணைப்பு வழங்ககோரி அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.  ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்திருந்த நிலையில் இளநிலை பொறியாளரிடம்  இணைப்பைத் தருமாறு கேட்டுள்ளனர்.அதற்கு ஸ்ரீதர் , உங்களுடைய மனு ஆன்லைனில் உள்ளது என்றும்   , மாவட்ட அலுவலகம் சென்று, ”மாவட்ட ஆட்சியரின் கன்னத்தில் அரை விட்டு சான்றிதழ் வாங்கிட்டு வா ”, பின்னர் மின் இணைப்பு தருகிறேன் என தரகுறைவாகவும்,ஒருமையிலும் பேசியுள்ளார்.

அப்போது ஊர் மக்கள் கோவிலுக்குதானே மின் இணைப்பு கொடுக்குமாரு கேட்கிறோம் என்று கூறியுள்ளனர்.அதற்கு அவர் ”மாவட்ட ஆட்சியரின் சட்டையைப் பிடித்து கேளுங்கள்  என்றும் நான் அடுத்த நொடியே மின் இணைப்பு தருகிறேன்”, என்றும் கூறியுள்ளார்.அப்படி நீங்கள் வாங்கிவந்தால் உங்கள் கோவிலுக்கு நானே பணம் தருகிறேன் ”எனவும் கூறியுள்ளார்.மேலும் கோவிலின் தடையில்லாச் சான்றிதழ் போன்றவற்றை தாசில்தார் மற்றும் கிராமநிர்வாக அலுவலரிடமும் வங்கி வாருங்கள் எனவும் கோவமாக கூறியுள்ளார்.மேலும் அப்படி சான்றிதழ் வாங்கி வந்தால் உங்கள் கோவிலுக்கு மின் இணைப்பு கொடுத்தால் மாதம் 10லட்சம் தருவீர்களா? எனவும்  ஊர்மக்களிடம் கேட்டுள்ளார்.மாவட்ட ஆட்சியரை தரக் குறைவாக பேசியதாக அறிந்த  மின்வாரிய பொறியாளர் பிரகாசம் , பொறியாளர் ஸ்ரீதரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

MUST READ