ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு என ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாமல் 6.5% என்ற அளவில் இருந்து வந்தது. இது பிப்ரவரியில் 0.25% குறைந்தது உள்ளது. இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை அடுத்து, ரெப்போ வட்டி விகிதம் 6.25%ல் இருந்து 6%-ஆக குறைந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீடு, வாகனம், தனி நபர் கடன் வட்டி விகிதம் ஆகியவை குறைய வாய்ப்புள்ளது என எதிா்பாா்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி இது போன்று, கடந்த 2 மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை அரை சதவீதமாக குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. உணவுப்பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பில் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. பணவீக்க விகிதம் 4%க்குள் இருக்கும் வகையில் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்: முதல்வரின் அறிவிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி