Homeசெய்திகள்தமிழ்நாடுஒன்றிய அரசின் எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம்: அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிவு!

ஒன்றிய அரசின் எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம்: அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிவு!

-

- Advertisement -

மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தல் | கூட்டாட்சித் தத்துவம் மற்றும் சொத்துரிமையைப் பாதுகாக்கக் கோரிக்கை.ஒன்றிய அரசின் எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம்: அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிவு!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (FCRA) திருத்தச் சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசு சார்பில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் இத்தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

we-r-hiring

கூாட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான மசோதா
சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ஒன்றிய அரசின் இந்த மசோதாவால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவது குறித்துக் கடுமையாகச் சாடினார். “ஒன்றிய அரசால் கொண்டு வரப்படும் எந்தவொரு சட்டமும், மசோதாவும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சொத்துரிமைப் பாதுகாப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை உறுதியாக வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய எஃப்.சி.ஆர்.ஏ (FCRA) மசோதா இதற்கு மாறாக உள்ளது” என்று அமைச்சர் பேரவையில் சுட்டிக்காட்டினார்.

திரும்பப் பெற வலியுறுத்தல்சமூக சேவை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்விச் சார்ந்த அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையிலும், மாநிலங்களின் அதிகார வரம்பில் தலையிடும் வகையிலும் இந்த மசோதாவின் சரத்துகள் அமைந்துள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டது. எனவே, மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராக அமைந்துள்ள இந்த வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை மசோதாவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இத்தீர்மானத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது. கட்சி வேறுபாடின்றி அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் இத்தீர்மானத்திற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு: கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

MUST READ