spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரூபாய் 6,000 நிவாரணம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

ரூபாய் 6,000 நிவாரணம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

-

- Advertisement -

 

ரூபாய் 6,000 நிவாரணம் வழங்கும் திட்டம் தொடக்கம்!
Photo: TN Govt

சென்னை வேளச்சேரியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் இன்று (டிச.17) காலை 10.00 மணி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் கனமழையால் பாதிக்க மக்களுக்கு ரூபாய் 6,000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

we-r-hiring

ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நியாய விலைக் கடைகளில் நாளை (டிச.18) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையும், பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணத் தொகை குறித்த சந்தேகங்களுக்கு 044- 28592828 மற்றும் 1100 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க ரூபாய் 1,455 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!

நிவாரணத் தொகை தொடக்க நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ