spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை தகவல் வதந்தி! தமிழக அரசு அறிவிப்பு...

பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை தகவல் வதந்தி! தமிழக அரசு அறிவிப்பு…

-

- Advertisement -

பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அது வதந்தி என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை தகவல் வதந்தி! தமிழக அரசு அறிவிப்பு...பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என பரவும் தகவல் வதந்தி என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை தேசிய பொது விடுமுறையை அறிவித்து இருப்பதால், அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படாது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.

இந்நிலையில், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை என்று பரப்பப்படும் தகவல் வதந்தி என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதிகாரபூர்வ வலைத் தளப் பக்கத்தில் கூறியதாவது, இது முற்றிலும் வதந்தி. பரவி வரும் இணையதள செய்தி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதாகும். இது போன்ற எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறையும் நாளை பள்ளிகளும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.

உலகச் சுற்றுச்சூழல் நாளில் ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ – அன்புமணி அறிவுறுத்தல்!

we-r-hiring

MUST READ