Homeசெய்திகள்தமிழ்நாடுசேலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

சேலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மாநில உரிமைகள் மீட்பை வலியுறுத்தி, நம் இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்ற சேலம் மாவட்டத்தில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினோம். சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் அண்ணன் TM செல்வகணபதி அவர்களை ஆதரித்து, ஓமலூர் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ஏலத்துக்கு விடாத குறையாக அனைத்தையும் விற்றுத்தள்ளும், ஒன்றிய பாசிச பாஜக அரசை, சேலத்து மக்கள் வீழ்த்த வேண்டும். பாசிசம் வீழட்டும்! எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ