spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசனாதன சர்ச்சை- ஆளுநருக்கு கடிதம் வழங்கிய பாஜக தலைவர்கள் குழு

சனாதன சர்ச்சை- ஆளுநருக்கு கடிதம் வழங்கிய பாஜக தலைவர்கள் குழு

-

- Advertisement -

சனாதன சர்ச்சை- ஆளுநருக்கு கடிதம் வழங்கிய பாஜக தலைவர்கள் குழு

சனாதனம் குறித்து வெறுக்கத்தக்க வகையில் பேசியதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் சேகர் பாபுவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக தலைவர்கள் குழு கடிதம் வழங்கியது.

Image

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் உத்தரவிடக் கோரியும், அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரியும் இன்று தமிழக பாஜக மூத்த தலைவர்கள், மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ