spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

-

- Advertisement -

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்த்துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி மண்டலம் 6, மதுரை மாநகராட்சி மண்டலம் 3, பொள்ளாச்சி நகராட்சி, புதுக்கோட்டை நகராட்சி, சேரன் மகாதேவி பேரூராட்சி என செயல்படுத்தப்படுகிறது.

மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Chief Minister

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

we-r-hiring

விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக அரசுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், தனியார்த்துறை, தனியார் நிறுவனங்கள், தூய்மை பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களும் பயன் பெறுவார்கள், தூய்மை பணியாளர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து கள ஆய்வு நடத்தப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து கள ஆய்வு நடத்தப்பட்டது
ஆய்வு

தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தூய்மை பணிக்கான இயந்திரங்கள் இயக்கத்திறன், தூய்மை பணியாளர்கள் மாற்றுத் தொழில் தொடங்க வங்கி கடன் வசதி ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

முதல்வர் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட லோகோவை வெளியிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குகிறார்.

MUST READ