
நெல்லை பட்டியலின இளைஞர்கள் மீது கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல் தாக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க. நிர்வாகிகள் 13 பேர் கைது!
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்திக் கொடூரமாக த் தாக்கி சித்ரவதைச் செய்ததாக பத்திரிக்கை செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது , இக்கொடூர சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.
இந்த விடியா தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.
கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்து, அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
“நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகிறதா?”- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!
இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல், ஆகவே இந்த கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல், காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.