spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

-

- Advertisement -
மழை
கனமழை காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் இன்று நீலகிரி, கோவை , திருப்பூர், தேனி , திண்டுக்கல், மதுரை , சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

we-r-hiring

அதன்படியே தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கனமழை எச்சரிக்கை காரணமாகவும், மாணவர்களின் நலன் கருதியும் தமிழகத்தில் இன்று (நவ 23) 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் , உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ