spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் சீமான் ஆஜராகவில்லை

நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் சீமான் ஆஜராகவில்லை

-

- Advertisement -

நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் சீமான் ஆஜராகவில்லை

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில், காவல் நிலையத்தில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகவில்லை.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாலியல் பலாத்காரம், மோசடி, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சீமான் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் இவ்வழக்கில் சீமானை போலீசார் கைது செய்யவில்லை. இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

we-r-hiring

அந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இன்று வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகுமாறு சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் சீமான் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. சீமான் விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் குழுவினர் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

வழக்கறிஞர்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தரப்பு வழக்கறிஞர், “சீமான் ஆஜராகாததற்கான காரணங்களை 2 கடிதங்களாக போலீசாரிடம் வழங்கியுள்ளோம். 2011 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக சீமானிடம் விசாரணையா என கேட்டோம். தனது சந்தேகத்துக்கு போலீஸ் தரப்பு விளக்கம் அளித்த பிறகு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என கடிதத்தில் சீமான் குறிப்பிட்டுள்ளார்” என்றார்.

MUST READ