Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீவைகுண்டத்தில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

ஸ்ரீவைகுண்டத்தில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியில் தமிழகத்தில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நேற்று (6.4.2024) தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள் இந்தியா கூட்டணி கட்சிகளில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஊர்வசி அமிர்தராஜ் MLA அவர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியின் மூத்தத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.

MUST READ