Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

-

 

senthil balaji

ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டைகளாக குட்கா பறிமுதல்

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் மாதம் 13- ஆம் தேதி அன்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருந்ததை அடுத்து, ஜூன் 21- ஆம் தேதி அன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதே நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். உடல்நலம் தேறியதை அடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்தப் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்தது காவல்துறை!

அங்கு அவருக்கு சுமார் இரண்டு மணி நேரம் மருத்துவப் பரிசோதனை நடைபெற்ற நிலையில், புழல் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக சிறை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ