Homeசெய்திகள்தமிழ்நாடுஜாமின் கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல்

ஜாமின் கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல்

-

ஜாமின் கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல்

ஜாமின் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இனி நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராக தேவையில்லை, காணொலி காட்சி வாயிலாக ஆஜராகலாம் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

மேலும் செந்துல்பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிக்க அதிகாரவரம்பு இல்லை எனக் கூறிய சிறப்பு நீதிமன்றம், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தியது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி அல்லியிடம் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையிட்டுள்ளார்.

MUST READ