Homeசெய்திகள்தமிழ்நாடுதினசரி பல கனஅடி தண்ணீரை உள்வாங்கிய அதிசய கிணறு!

தினசரி பல கனஅடி தண்ணீரை உள்வாங்கிய அதிசய கிணறு!

-

 

தினசரி பல கனஅடி தண்ணீரை உள்வாங்கிய அதிசய கிணறு!

எவ்வளவு தண்ணீர் பெருக்கெடுத்தாலும் நிறையாத அதிசய கிணறாகக் குறிப்பிடப்படும் கிணறு, தற்போது பெய்த பெருமழையால் நிரம்பியிருக்கிறது.

வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் எப்போது?

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே ஆயன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த கிணறை அதிசய கிணறு என்றே அழைக்கிறார்கள். கடந்த ஆண்டு இந்த கிணற்றில் அருகில் இருந்த குளம் நிரம்பி வெளியேறிய நீர் முழுவதும், கிணற்றுக்குள் சென்று உள்வாங்கியது. தினசரி அசராமல் பல கனஅடி நீரை உள்வாங்கி, பல மைல் தூரம் உள்ள கிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்தி நன்மை செய்தது.

அதனால் இதனை பலமுறை சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்து ஆய்வுச் செய்து, இந்த கிணற்றில் மூலமாக, இந்த பகுதிகளில் உள்ள கிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்தவும், விவசாயத்தையும் பெருக்க முடியும் என ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த கிணறு பற்றி கேள்விப்பட்டு, தென் மாவட்ட மக்கள் பலரும் நேரில் சென்று பார்த்து மகிழ்ந்தனர். இந்தாண்டு முழுவதும் வறண்டு காட்சி அளித்த இந்த கிணற்றுக்கு இரு தினங்களாக பெய்த பலத்த மழை காரணமாக, தண்ணீர் வரத்து தொடங்கியது. கடந்த டிசம்பர் 17- ஆம் தேதி முதல் இந்த கிணற்றுக்கு 100 முதல் 200 கனஅடி வரை தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது.

‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!

கிணற்றின் பக்கவாட்டுச் சுவர் இடிந்ததாலும், மண் சூழ்ந்ததாலும் அதிசய கிணறு நிரம்பியுள்ளது. கிணற்றில் மண் சூழ்ந்ததால், 40 அடி கிணற்றுக்குள் உள்ளே உள்ள நீர் உள்வாங்கும் பகுதி முழுவதுமாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் உள்வாங்கும் நிலை மாறி தண்ணீர் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

MUST READ