ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயிவே அறிவித்துள்ளது.
ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு செப்டம்பர் 22,29 மற்றும் அக்டோபர் 6,13லும், மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செப்படம்பர் 29,30 மற்றும் அக்டோபர் 7,14,21லும் சிறப்பு ரயில் இயக்கப்படும். அதேபோல், நெல்லையில் இருந்து செங்கல்பட்டிற்கு செப்டம்பர் 26,28, அக்டோபர் 3,5,10,12,17,19,24,26லும், மறுமார்க்கத்தில் செப்டம்பர் 26,28, அக்டோபர் 3,5,10,12,17,19,24,26லும் ரயில் சேலை இயக்கப்பட உள்ளது என அறிவித்துள்ளது.
எங்க அப்பாட்ட பேசுங்க சார்…. கதறிய ரோபோ சங்கர் மகள்…. கண்கலங்கிய கமல்!


