தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவாக அதிமுகவின் ஒரு தரப்பு எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவுடன் ரகசிய உடன்பாடு வைத்து ஆட்சி அமைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டிய சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு, “திமுகவை எதிர்த்து உருவாக்கப்பட்ட அதிமுக, அதற்கு ஒருபோதும் துணை போகாது” எனக் கூறி தனி அணியாகச் செயல்படத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர்.
ஆதரவு அளித்த எம்.எல்.ஏ–க்களின் பட்டியல்:

விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ள எம்.எல்.ஏ-க்களின் பட்டியல்
- எஸ்.பி. வேலுமணி
- சி.வி. சண்முகம்
- கே.பி. அன்பழகன்
- சி. விஜயபாஸ்கர்
- நத்தம் விஸ்வநாதன்
- எம்.ஆர். விஜயபாஸ்கர்
- கே.சி. வீரமணி
- ஜெயக்குமார்
- இசக்கி சுப்பையா
- காமராஜ்
- ஹரி
- சத்தியபாமா
- மரகதம் குமரவேல்
- மரகதம் வெற்றிவேல்
- லீமா ரோஸ்
- சுகுமார்
- சேகர்
- திலீபன்
- நடராஜ்
- மோகன்
- ரவி மனோகரன்
- ராகேஷ்
- ஹரி பாஸ்கர்
- அருண்மொழி வர்மன்
- பாலகிருஷ்ண ரெட்டி
இந்த ஆதரவின் மூலம், விஜய் தலைமையிலான அரசு 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் தனது மெஜாரிட்டியை நிரூபித்துள்ளது. எஸ்.பி. வேலுமணி அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும், ஜி.ஹரி துணைத் தலைவராகவும் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளனர்.
அதிமுகவின் அடிப்படை கொள்கை திமுக எதிர்ப்புதான். அந்த கொள்கையைக் காக்கவே நாங்கள் மக்கள் செல்வாக்கு பெற்ற தவெக அரசுக்கு ஆதரவளிக்கிறோம்,” என்று சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த அதிரடி மாற்றத்தால், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கட்சி விதிகளின்படி இந்த எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது அதிமுகவில் அதிகாரப்பூர்வமான பிளவு ஏற்படுமா என்பதைத் தமிழக அரசியலே உற்று நோக்கி வருகிறது.
“குதிரை வேகம் உண்டு; குதிரை பேரம் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்
