Homeசெய்திகள்தமிழ்நாடு“குதிரை வேகம் உண்டு; குதிரை பேரம் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்

“குதிரை வேகம் உண்டு; குதிரை பேரம் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்

-

- Advertisement -

குதிரை வேகம் உண்டு ஆனால் குதிரை பேரம் இல்லை என சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளாா்.“குதிரை வேகம் உண்டு; குதிரை பேரம் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்  போது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது முதல் உரையை உணர்ச்சிப்பூர்வமாகவும் அதேசமயம் வலிமையாகவும் பதிவு செய்தார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், தனது அரசு எத்தகைய பாதையில் பயணிக்கும் என்பதை ஒரே வரியில் தெளிவுபடுத்தினார்.

we-r-hiring

முதலமைச்சர் விஜய் பேசுகையில்,“இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் உருவான அரசு அல்ல. எங்களின் இலக்கு மக்களுக்கான சேவை மட்டுமே. அதை நோக்கியே எங்களின் ஒவ்வொரு அடியும் இருக்கும்,” என முழங்கினார். மேலும் அவர் தெரிவித்ததாவது, இது மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட “மக்கள் கூட்டணி” அரசு. இந்த ஆட்சியில் சாதாரண குடிமகனின் குரலுக்கும் செவிசாய்க்கப்படும். எக்காலத்திலும் மதச்சார்பற்ற கொள்கையிலிருந்து இந்த அரசு விலகாது.

சமூக நீதியையும், பெண் பாதுகாப்பையும் உறுதி செய்வதே எங்களின் முதல் கடமை.முந்தைய அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் எவையும் நிறுத்தப்படாது; அவை இன்னும் செம்மையாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும். அரசியலில் மாற்றம் என்பது ‘நிஜமாக’ இருக்க வேண்டும், அது வெறும் ‘ரீல்’ (Reel) ஆக இருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்கு மறைமுகமாகப் பதிலடி கொடுத்தார்.

சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 144 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன் மூலம் தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்து, தனது ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளது. வாக்கெடுப்பின் போது தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அதிமுக-வில் இருந்து பிரிந்து வந்த ஒரு தரப்பினரும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

“முதல்வர் செல்லும் முன்னே சோஃபா.. கூவத்தூரையே மிஞ்சிய கூத்து” – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

MUST READ