spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஸ்டிரைக் நடந்தாலும் சிறப்பு பேருந்து இயக்கப்படும்"- அமைச்சர் சிவசங்கர் பேட்டி!

“ஸ்டிரைக் நடந்தாலும் சிறப்பு பேருந்து இயக்கப்படும்”- அமைச்சர் சிவசங்கர் பேட்டி!

-

- Advertisement -

 

தாம்பரம், கோயம்பேடு பகுதிகளில் வழக்கம்போல் செயல்பட தொடங்கிய போக்குவரத்து!

we-r-hiring

சென்னையில் நிதித்துறைச் செயலாளருடன் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் நாளை (ஜன.09) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அதைத் தொடர்ந்து, நேற்று (ஜன.07) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில், இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (ஜன.08) அமைச்சர் சிவசங்கர் தலைமையில் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், சுமூகத் தீர்வுக் காண அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோரமண்டல் தொழிற்சாலை விவகாரம்… திமுக அரசு இரட்டை வேடம்- நாராயணன் திருப்பதி கண்டனம்

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் நிதித்துறைச் செயலாளருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வேலைநிறுத்தம் அறிவித்த போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தைத் தொடங்கவுள்ள நிலையில், ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.

போக்குவரத்துத்துறையில் நிதிப்பற்றாக்குறை, தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், “போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடந்தாலும் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என எதிர்பார்க்கிறோம். மக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்து தரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ