spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமரம் விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு!

மரம் விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு!

-

- Advertisement -

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

மரம் விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்- நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல்..

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில்-1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பாபநாசம் வட்டம், உள்ளிக்கடை, கண்டகரையத்தைச் சேர்ந்த சுஷ்மிதாசென் (வயது 15) மற்றும் பாபநாசத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 15) ஆகிய இருவர் மீதும் நேற்று (ஆகஸ்ட் 29) மாலை பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக பள்ளியின் அருகில் உள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் சுஷ்மிதாசென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ராஜேஸ்வரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

“ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி”?- முரசொலி கேள்வி!

சுஷ்மிதாஷென்னை இழந்து வாடும் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரிக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்”. இவ்வாறு முதலமைச்சர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ