போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
தொடர் விடுமுறை மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து டெல்லி மற்றும் சீரடி வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் என 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதன்படி சீரடியில் இருந்து பகல் 1.50 மணிக்கு சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானமும், மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு சீரடி செல்ல வேண்டிய ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல் இரவு 8.20 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வர வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், மறுமார்க்கமாக இன்று இரவு 9.05 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி, சீரடி ஆகிய வருகை, புறப்பாடு என 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.