
வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மே 19- ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

சந்திரபாபு நாயுடுவின் வீடு முடக்கம்
சென்னையில் இரண்டு நாட்களுக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரும் மே 17- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசைக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் பலத்த காற்று வீசக்கூடும். தெற்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் மூன்று நாட்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


