
சென்னை சாலிகிராமத்தில் ‘அகரம் அறக்கட்டளை’ சார்பில் இன்று (ஜூலை 16) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, “சாதி, மதத்தைக் கடந்து வாழ்க்கையைப் புரிந்துக் கொள்ளுங்கள். ஒருவர் வீண் சொல், பழிசொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக் கூடாது. அனைவருக்கும் சரியான சமமான கல்விக் கொடுக்க அகரம் அறக்கட்டளை முயற்சி எடுத்து வருகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கைத் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
கல்வி மூலமாக வாழ்க்கையைப் படியுங்கள், வாழ்க்கை மூலமாக கல்வியைப் படியுங்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தலை வணங்குகிறேன். மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பது எவ்வளவு கஷ்டம் என தெரியும். இதுபோன்றக் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வால் தான் வாழ்க்கை முழுமையடைகிறது.
“சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
காலையில் சீக்கிரம் எழ வேண்டும்; அதை இப்போதுதான் நான் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளேன். பிறரை பழி சொல்லுதல், பிறரைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதைக் குறைக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.