
ஒருபுறம் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மற்றொரு புறம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன்படி, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னையில் நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் கனமழை பொழிந்தது.

போலீசாக நடிக்கும் பிரபாஸ்..? அர்ஜுன் ரெட்டி பட இயக்குனருடன் கூட்டணி!
கிண்டி, தியாகராய நகர், தேனாம்பேட்டை, நந்தனம், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோல், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
மதுரவாயல், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்டப் பகுதிகளிலும் நேற்று (நவ.26) மாலையில் இருந்தே பலத்த மழை பெய்தது.
பிக் பாஸ் வீட்டில் அனன்யாவின் ரீ என்ட்ரி….. மாயாவிற்கு விஷ பாட்டில் பட்டம்…. அடுத்தது என்ன?
கோவையில் ராமநாதபுரம், போத்தனூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, செம்பரப்பாக்கம், நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம், திருவேற்காடு உள்ளிட்டச் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது.