தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்றி வைக்கிறார்.
இந்நிலையில் விழாவுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என 300 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விழாவிற்கான பாதுகாப்பு பணிகளை அண்மையில் நடந்து முடிந்த கட்சியின் கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக செய்து முடித்த துபாய் பவுன்சர் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
அவர்களோடு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் நாளைய தினம் கட்சியின் கொடி அறிமுகம் செய்துவிட்டு, கட்சிக்கான பாடலையும் வெளியிட்டு நிர்வாகிகளிடையே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார்.