Homeசெய்திகள்தமிழ்நாடுமரம் முறிந்து விழுந்து 3½ வயது குழந்தை பலி

மரம் முறிந்து விழுந்து 3½ வயது குழந்தை பலி

-

மரம் முறிந்து விழுந்து 3½ வயது குழந்தை பலிவால்பாறை அருகே மரம் முறிந்து விழுந்து 3½ வயது குழந்தை பலி தந்தை படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(42). தோட்ட தொழிலாளியான இவர் தனது மகன் முகிலனை(3½)  அங்குள்ள பால்வாடிக்கு இன்று காலை அழைத்து சென்று கொண்டிருந்த போது மழை மற்றும் காற்று அதிகமாக வீசியுள்ளது.

அப்போது அந்த வழியாக சென்ற மூர்த்தி மற்றும் அவரது மகன் முகிலன் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளன்.  தந்தை மூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மரம் முறிந்து விழுந்து 3½ வயது குழந்தை பலி

உடனடியாக இருவரையும் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். பின்னர் காயம் பட்ட மூர்த்திக்கு சிகிச்சை அளித்து உயர் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆவடி: துப்புரவு பணியாளர் பாதுகாப்பு விழிப்புணர் கூட்டம்

இறந்த சிறுவன் முகிலனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது.மரம் விழுந்து சிறுவன் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ