விஷவாயு தாக்கி துப்புரவு ஊழியர் உயிரிழந்த விவகாரம். ஆவடி மேயர் தலைமையில், துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர் கூட்டம்.
ஆவடி அருந்ததிபுரத்தை சேர்ந்த கோபிநாத்(25). இவர்,கடந்த 11ம் தேதி சரஸ்வதி நகரில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்! டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி
அரசு சார்பில் அவரது குடும்பத்துக்கு 42 இலட்சம் இழப்பீடும், மனைவிக்கு ஜூனியர் அசிஸ்டண்ட் பணியும் வழங்கபட்டுள்ளது.
இந்நிலையில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் தலைமையில், பாதுகாப்பான முறையில் கழிவுநீர் இணைப்புகளை சுத்தப்படுத்துதல் பராமரிப்பது குறித்த செய்முறை பயிற்சி கூட்டம் ஆவடி மாநகராட்சி அருகே நடைபெற்றது.
இதில், ஆவடி மாநகராட்சி ஆணையர் எஸ்.கந்தசாமி, தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் தென்னரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணியை செய்திடும் வகையில்,ரூ.3 லட்சம் மதிப்பில், ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட 2 புதிய பாதுகாப்பு கவச உடைகளை ஆவடி மேயர் உதயகுமார், மாநகராட்சி அதிகாரிகளிடம் வழங்கினார்.
இக்கூட்டதில், தூய்மை பணியாளர்கள், பாதாள சாக்கடைக்குள் இறங்கி,சுத்தம் செய்ய கூடாது எனவும், அவ்வாறு சுத்தம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டாலும், ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடையினை உடுத்திக்கொண்டு பணியினை மேற்கொள்ள வேண்டும் எனவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு உடைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று செயல்முறை விளக்கம் மூலம் செய்து காட்டினார். சென்னை மெட்ரோ குடிநீர் அதிகாரிகள், பணியாளர்களுக்கு காணொளி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.